வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இடாநகர்: எந்வொரு சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கு, நமது பாதுகாப்புப் படை தயாராக உள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அருணாச்சலப்பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தில், எல்லையோர பாதுகாப்பு அமைப்பால் கட்டப்பட்ட சியாம் பாலம் மற்றும் 27 உள்கட்டமைப்புத் திட்டங்களையும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(ஜன.,03) துவக்கி வைத்தார். இதன் மதிப்பு 724 கோடியாகும்.

இதையடுத்து, அவர் பேசியவதாவது: எந்வொரு சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கு, நமது பாதுகாப்புப் படை தயாராக உள்ளது. இந்தியா எப்போதும் போருக்கு எதிரானது. இந்தியா எந்த நாட்டுக்கும் எதிராகப் போரைத் துவக்கவில்லை.
நாட்டில் குறிப்பாக, வடக்கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பா.ஜ., சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நமது ஆயுதப்படையுடன், எல்லையோர சாலை அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது.

எந்த நாட்டிலிருந்தும் ஒரு அங்குல நிலத்தைக் கைப்பற்றவில்லை, ஆனால் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement