ஒரே நேரத்தில் 2 வகையான புற்றுநோயை எதிர்கொள்ளும் டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவ்ரதிலோவா

முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவ்ரதிலோவா, தொண்டை மற்றும் மார்பக புற்றுநோயால் அவதியுற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டென்னிஸில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீராங்கனை மார்டினா நவ்ரதிலோவா, 1978 மற்றும் 1990-களுக்கு இடையில் 9 விம்பிள்டன் ஒற்றையர் பட்டங்களை வென்று சாதனை படைத்தார்.

தற்போது 66 வயதாகும் மார்டினா, ஓய்வு பெற்ற பின்னர் வர்ணனையாளராக மாறினார். இந்நிலையில், சமீபத்தில் உடல் பரிசோதனை செய்ததில், இவருக்கு தொண்டை மற்றும் மார்பகத்தில் புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருப்பது தெரியவந்தது. 

இந்த மாத இறுதியில் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு மார்டினா செல்ல உள்ளார்.

 

Tennis great Martina Navratilova diagnosed with throat and breast cancer

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.