டெல்லி கார் விபத்து: பலியான இளம்பெண்ணின் பிரேத பரிசோதனை… சம்பவத்தின் பின்னணி!

தலைநகர் டெல்லியில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. நிர்பயா தொடங்கி அஞ்சலி சிங் வரை பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமா டெல்லி? என்ற கேள்வியை எழுப்புகிறது. உலகெங்கும் 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலருக்கும் மகிழ்ச்சியுடன் தொடங்கிய நிலையில் டெல்லியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணின் வாழ்க்கை சோகத்துடன் முடிவுக்கு வந்தது.

புத்தாண்டு கொண்டாட்டம்

டெல்லியில் ஜனவரி ஒன்றாம் தேதி அதிகாலை 1.45 மணியளவில் ஓட்டல் ஒன்றில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து விட்டு இளம்பெண் ஒருவர் ஓட்டல் ஒன்றில் இருந்து வெளியே வந்துள்ளார். அதன்பிறகு தனது ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. கன்ஜாவ்லா – சுல்தான்புரி பகுதியில் ஸ்கூட்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது 5 பேருடன் வந்த கார் இளம்பெண்ணின் ஸ்கூட்டர் மீது மோதி நிற்காமல் வேகமாக சென்றது.

காரில் சிக்கிய இளம்பெண்

இதில் காருக்கு அடியில் இளம்பெண் சிக்கிக் கொண்டார். சுமார் 12 கிலோமீட்டர் காரில் தரதரவென இழுத்து செல்லப்பட்டு கொடூரமாக உயிரிழந்துள்ளார். அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த காரில் இருந்த கண்ணா, அமித் கண்ணா, கிரிஷன், மனோஜ் மிட்டல், கிரிஷன் ஆகியோரை கைது செய்து விசாரித்ததில் மதுபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

பாலியல் துன்புறுத்தலா?

காரில் இளம்பெண் இழுத்து செல்லப்பட்டது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். இதற்கிடையில் உயிரிழந்த பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்பெண்ணின் தாயார் ரேகா கூறுகையில், நான் எனது மகளின் உடலை பார்க்கும் போது ஆடைகள் கிழிந்திருந்தன.

முழு விசாரணை தேவை

கிட்டதட்ட நிர்வாணமாக இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்த வேண்டும். எங்களுக்கு உரிய நீதி வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த சூழலில் ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண்ணுடன் தோழி ஒருவர் இருந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தோழிக்கு எதுவும் காயம் ஏற்படவில்லை.

பிரேத பரிசோதனை அறிக்கை

விபத்து நடந்த போது அவர் அங்கிருந்து சென்றிருக்கிறார். அவர் தான் முக்கிய தடயமாக இருக்கிறார் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கார் விபத்தில் உயிரிழந்த டெல்லி இளம்பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், அவரது பிறப்புறுப்பில் எந்தவித காயங்களும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

அமித் ஷா உத்தரவு

அதேசமயம் அடுத்தகட்ட ஆய்விற்காக அவரது மாதிரிகள், உடை ஆகியவை பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளுமாறு டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் டெல்லி மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.