புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் எலி பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். அன்னவாசல் அருகே முக்கணாமலை சேர்ந்த முஹம்மத் அபாஸ் என்பவரின் மகன் மொஹம்மத் அனீஸ் புதுக்கோட்டையில் அரசு உதவிபெறும் பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் இவர் வழக்கம் போல் பள்ளி முடிந்து பேருந்து நிலையத்திற்கு சென்ற போது எலி பேஸ்ட்டை தின்றதாக அவருடைய நண்பர்களிடம் கூறியுள்ளார்.
அதிர்ந்த நண்பர்கள் அவர்களின் பெற்றோர்களுக்கு தகவலை தெரிவித்துவிட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரையாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்டுள்ளார் என முதல் கட்ட விசாரணையில் போலீசார் இடம் இருந்து தகவல் தெரியவந்துள்ளது.