தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது.
இந்த நடைபாண்டு காண பொது தேர்வு சுமார் 17.7 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். இதில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர்.
அந்த வகையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மார்ச் 13ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் நாளை (04.01.2023) மதியம் 2 மணி முதல் தேர்வு துறை இணையதளத்தில் இருந்து பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.