மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காததால் 8 வயது சிறுவன் உயிரிழந்தாகக்கூறி மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நடுக்கரையை சேர்ந்த சேகர் என்பவரின் 8 வயது மகன் ஹரிஷ், கடந்த 30-ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென மயக்க ஏற்பட்டதையடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்காததால் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது பாம்பு கடித்திருப்பது தெரியவந்தது.
சிகிச்சை பலனின்றி நேற்று சிறுவன் உயிரிழந்ததையடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற ஆட்சியர் லலிதா, இது தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும், 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாகவும் தெரிவித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.