தமிழகத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் மீது அவ்வவ்போது விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏவும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
அதன்படி, சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ எபினேசர் ஆய்வு பணியில் ஈடுபட்ட போது, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கார்ப்பரேஷன் ஊழியர் வெறும் கைகளால் சாக்கடை கழிவுகளை அள்ளி சுத்தம் செய்ததாக குறிப்பிடப்பட்ட அந்த வீடியோவை தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியிருக்கிறது.
This is not new or a one of incident .This is the first time it has been recorded on video .Most sanitation workers across Tamilnadu use their bare hands to clean sewers.Also manual scavenging is deaths of Tamilnadu are highest in the country.The state does not care .
— Shalin Maria Lawrence (@TheBluePen25) January 4, 2023
அதனை சமூக செயற்பாட்டாளரான ஷாலின் மரியா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “துப்புரவு பணியாளரை வெறும் கையால் சாக்கடையை அள்ள தி.மு.க. எம்.எல்.ஏ வற்புறுத்தியிருக்கிறார். இது மனித கழிவுகளை மனிதர்களையே அள்ள வைப்பதற்கு எதிரான சட்டத்தை மீறும் செயல். இது புதிதாக நடக்கும் நிகழ்வல்ல. ஆனால் முதல் முறையாக பொது வெளிச்சத்துக்கு வீடியோவாக வந்திருக்கிறது.
தமிழகம் முழுவதும் பரவலாக துப்புரவு பணியாளர்கள் வெறும் கையில்தான் கழிவுகளை அள்ளுகிறார்கள். இப்படி வெறும் கையால் துப்புரவு வேலை செய்வதால் அதிகளவு இறப்பு எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. ஆனால் மாநில அரசோ அதனை கண்டுகொள்ளவில்லை” என காட்டமாக குறிப்பிட்டிருக்கிறார்.
And I don’t know why BJP supporters are also bashing DMK . Isn’t the centre also responsible for abolishing manual scavenging? I hold both DMK and BJP responsible for this .
— Shalin Maria Lawrence (@TheBluePen25) January 4, 2023
ஷாலின் மரியா லாரன்ஸின் இந்த ட்விட்டர் பதிவு வைரலான நிலையில், தி.மு.க எம்.எல்.ஏ எபினேசர் அந்த குற்றச்சாட்டை மறுத்ததோடு கண்டனமும் தெரிவித்து அதே பதிவில் பதிலளித்திருக்கிறார். அதில் எபினேசர் குறிப்பிட்டுள்ளதன் விவரத்தை காணலாம்.
“இது நியாமற்ற குற்றச்சாட்டு. ‘துப்புரவு பணி மேற்கொள்ளும்படி கார்பரேஷன் ஊழியரை எம்.எல்.ஏ வற்புறுத்தினார்’ என்ற பதிவை திரும்ப பெறாவிடில் இது குறித்து புகார் கொடுக்க நேரிடும். என்னிடம் முழு வீடியோவும் இருக்கிறது. நான் அந்த ஊழியரிடம் பேசவே இல்லை. அது முதலில் சாக்கடை கழிவே இல்லை. அது குடிநீர் தேக்கம்.
Does that news channel have mentioned anything that ” mla forced “. How you came to conclusion with that half edited news video? I just said to J.E of corporation ” நீங்க செய்யலான நான் வேணா கிளீன் பண்ணட்டுமா கை விட்டு “.
— J.J.Ebenezer MLA (@JJEbenezer1) January 4, 2023
குறிப்பிட்ட அந்த செய்தியில் ‘எம்.எல்.ஏ வற்புறுத்தினார்’ என இருக்கிறதா? பாதி எடிட் செய்யப்பட்ட செய்தியை வைத்து எப்படி நீங்களாக ஒரு முடிவுக்கு வருவீர்கள்? கார்பரேஷன் J.E-யிடம் ‘நீங்க செய்யலனா நான் வேணா கிளீன் பண்ணட்டுமா கை விட்டு’ என்றுதான் கூறினேன்.” என ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ எபினேசர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
இருப்பினும், தூய்மை பணியாளர் தன்னுடைய கைகளால் அப்படி சுத்தம் செய்வதை எம்.எல்.ஏ தடுத்து நிறுத்தியிருக்க வேண்டுமென்றும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM