தேனி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே புல்லாக்காபட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி அணில் குமார் (38). இவர் நேற்று முன்தினம் வீட்டில் மோட்டார் போடுவதற்காக சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென மின்சாரம் தாக்கி அணில் குமார் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
இதைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சடைந்த நிலையில் உடனடியாக அணில் குமாரை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அணில் குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அணில் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.