ஆளேமாறிப்போன இசைவாணி

கானா பாட்டின் மூலம் சென்னையை கலக்கி பின் உலக அளவில் பேமஸ் ஆனவர் இசைவாணி. தமிழின் முதல் பெண் கானா பாடகரான இவர், பிபிசி நிறுவனத்தின் 2020ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 100 பெண்கள் பட்டியிலில் இடம் பிடித்து புகழடைந்தார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியும் இவர் மீது லைம் லைட் வெளிச்சத்தை பாய்ச்சி செலிபிரேட்டியாக பிரகாசமடைய செய்தது. இன்று மேடை கச்சேரிகளில் பிசியாக வலம் வரும் இசைவாணி, சினிமாவிலும் பின்னணி பாடல்கள் பாடி வருகிறார். கடந்த காலங்களில் குடும்ப சூழ்நிலை, திருமண உறவில் பிரச்னை என தொடர்ச்சியாக பல கஷ்டங்களை மட்டுமே சந்தித்து வந்த இசைவாணி, இன்று தனது வாழ்க்கையில் வெற்றிநடை போட்டு முன்னேறி வருகிறார். அதற்கேற்றார் போல் புது கெட்டப்பில் ஆளேமாறிப்போய் கெத்தாக நின்று போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இசைவாணியின் இந்த வெற்றியை கண்டு மகிழ்ச்சியடையும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.