தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகும் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 3.15 கோடி பெண் வாக்காளர்கள், 3.04 கோடி ஆண் வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் அதிக வாக்காளர்கள் உள்ளனர். துறைமுகம் தொகுதியில் குறைந்த அளவில் வாக்காளர்கள் உள்ளனர்.
