இளம்பெண் முறையாக ஆடை அணியவில்லை என்று கூறி ஆண்கள் கூட்டம் செய்த பயங்கர செயல்



ஈராக் நாட்டில், இளம்பெண் ஒருவர் முறையாக ஆடை அணியவில்லை என்று கூறி ஒரு கூட்டம் ஆண்கள் அவரைத் துரத்தும், திகிலை ஏற்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மேற்கத்திய நாட்டவர்கள் போல் உடை அணிந்த இளம்பெண்

ஈராக்கில் ஆண்களுக்காக பைக் ரேஸ் ஒன்று நடந்துகொண்டிருந்திருக்கிறது. அந்த ரேஸைக் காண்பதற்காக 17 வயது இளம்பெண் ஒருவர் வந்திருக்கிறார். அவர் உள்ளாடை போன்று காணப்படும் கையில்லாத கருப்பு நிற மேலாடையும், குட்டைப்பாவாடையும் அணிந்து அதற்கு மேல் ஒரு கோட்டும் அணிந்துகொண்டிருந்திருக்கிறார்.

பொதுவாகவே இஸ்லாமிய நாடுகளில் உடை கட்டுப்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஏற்கனவே ஈரானின் ஹிஜாப் அணியாததற்காக ஒரு பெண்ணை பொலிசார் அடித்தே கொன்றுவிட்டார்கள்.

அப்படிப்பட்ட ஒரு சூழலில் ஒரு இளம்பெண் மேற்கத்திய நாட்டவர்களைப் போல உடையணிந்து ஆண்கள் கூட்டத்துக்குள் நுழைந்தால் என்ன ஆகும்?

துரத்திய ஆண்கள் கூட்டம்

ஆக, இப்படி குட்டைப்பாவாடையுடன் அணிந்து ஒரு இளம்பெண் நடந்து செல்வதைக் கண்ட ஒரு கூட்டம் ஆண்கள், அவர் முறையான ஆடை அணியவில்லை என்றும், ரேஸில் ஈடுபடுவோரின் கவனத்தை அவர் திசை திருப்புவதாகவும் கூறி, கொலை வெறியுடன் அவரைத் துரத்தத் துவங்கியுள்ளார்கள்.

சிலர் அந்த இளம்பெண்ணை அடிக்க, ஒருவர் அவரை எட்டி உதைக்கும் காட்சியை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.

ஏராளமான ஆண்கள் பயங்கரமாக சத்தமிட்டபடி அவரைத் துரத்த, அவருடன் வந்த ஒரு ஆண் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், அவருக்கும் அடி விழுந்ததாகவும், யாரோ அவரைக் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பலரும் அந்தப் பெண் தாக்கப்பட்டதற்கு எதிராக குரல் கொடுக்கத் துவங்கியுள்ள நிலையில், இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக பொலிசார் 16 பேரைக் கைது செய்துள்ளார்கள். அவர்களிடமிருந்து கத்திகள், பட்டாக்கத்திகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.