22 கரட்டுக்கு மேற்பட்ட தங்கத்தை ஆபரணங்களாக இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடு கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இதனை கட்டுப்படுத்தும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தங்க கடத்தல்
இந்த விடயத்தை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.
அத்துடன் இந்த நடவடிக்கையானது தங்க கடத்தலை தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.