ஆப்கானிஸ்தானில் அஷ்ரப் கனி தலைமையிலான தாலிபன்கள் மீண்டும் அந்த நாட்டை கைப்பற்றினர். அப்போது அவர்களுக்கு முதன் முதலில் ஆதரவு தெரிவித்தது பாகிஸ்தான். அதன் பிறகே மற்ற நாடுகள் தங்கள் ஆதரவை தெரிவிக்கத் தொடங்கினர். கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவர் காபுல் சென்றிருந்தார். ஆனால், இன்னொரு பக்கம் தாலிபன்கள் பாகிஸ்தானையும் தங்கள் வசமாக்குவதற்காக தெஹ்ரிக் இ தாலிபான் (Tehrik-i-Taliban) எனும் குழுவை அமைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தி வந்தனர் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கும் தெஹ்ரிக் இ தாலிபான்களுக்குமிடையே போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் இருந்தது. கடந்த ஆண்டு, இந்த ஒப்பந்தத்திலிருந்து தாலிபன்கள் வெளியேறினார். இதைத் தொடர்ந்து, பலுஸிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் தாலிபன்கள் – பாகிஸ்தான் ராணுவம் இடையான மோதல்கள் தீவிரமடைந்தது. இதையடுத்து, தாலிபன்கள் பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
தாலிபன்களின் மூத்த தலைவர் அகமது யாசிர் (Ahmed Yasir) தன் ட்விட்டர் பக்கத்தில் 1971-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் யுத்தத்தின் போது இந்தியாவிடம் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் படத்தைப் பகிர்ந்து, ” எத்தனையோ சாம்ராஜ்யங்களின் புதை குழியாக ஆப்கானிஸ்தான் இருந்திருக்கிறது.
د پاکستان داخله وزیر ته !
عالي جنابه! افغانستان سوريه او پاکستان ترکیه نده چې کردان په سوریه کې په نښه کړي.
دا افغانستان دى د مغرورو امپراتوريو هديره.
په مونږ دنظامي يرغل سوچ مه کړه کنه دهند سره دکړې نظامي معاهدې د شرم تکرار به وي داخاوره مالک لري هغه چې ستا بادار يې په ګونډو کړ. pic.twitter.com/FFu8DyBgio— Ahmad Yasir (@AhmadYasir711) January 2, 2023
எனவே ஆப்கானிஸ்தான் மீது ராணுவ தாக்குதல் நடத்த நினைக்க வேண்டாம். அப்படி ராணுவ தாக்குதலை நடத்த யோசித்தால் 1971-ம் ஆண்டு இந்தியாவிடம் பாகிஸ்தான் சரணடைந்த அவமானகரமான வரலாறு தான் மீண்டும் நிகழும்” என எச்சரித்திருக்கிறார்.