வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த முறையில் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான வருகைப்பதிவு பயோமெட்ரிக் முறைக்கு மாற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணவு அளிக்க முடியாத சூழல் உண்டாகியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த ஊழியர்களுடன் வண்டலூர் பூங்கா துணை இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பூங்காவில் உள்ள விலங்குகளும் பறவைகளும் உணவின்றி தவித்து வருகின்றன.