புதுச்சேரியில் தினமலர் மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி துவங்கியது| dinamalar smart shopper’s expo begins

புதுச்சேரி : தினமலர் -சத்யா இணைந்து வழங்கும் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ-2023, மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி இன்று கோலாகலமாக துவங்கியது. இந்த கண்காட்சியில் குண்டு ஊசி முதல் கார் வரை அனைத்து பொருட்களும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு புதுமையான ‘ஷாப்பிங்’ அனுபவத்தை வழங்க ‘தினமலர்’ ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ எனும் மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரி மட்டுமின்றி, கடலுார், விழுப்புரம், கள்ளச்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.

இந்தாண்டு மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்த ‘ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ’ புதுச்சேரி-கடலுார் சாலையில் கோர்ட் எதிரில் உள்ள ஏ.எப்.டி., மைதானத்தில் இன்று 5ம் தேதி துவங்கியது. வரும் 9ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது.

கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். தினமலர் வெளியீட்டாளர் கி. வெங்கட்ராமன்,சபாநாயகர் செல்வம். செல்வ கணபதி எம்.பி., கென்னடி எம்எல்ஏ, பாஜக மாநில தலைவர் சுவாமிநாதன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

குளு குளு அரங்குகள்

முழுவதும் ஏ.சி.,வசதி செய்யப்பட்ட பிரம்மாண்டமான அரங்குகளில் ஏராளமான ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. வீட்டு உபயோக பொருட்கள், ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மெத்தைகள் என குண்டு ஊசி முதல் கார் வரையிலான அனைத்து வகை பொருட்களையும் ஒரே கூரையின் கீழ் கூலாக ஷாப்பிங் செய்து மகிழலாம்.

வெளி மாநில ஸ்டால்கள்

தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத், ஹரியானா உள்ளிட்ட வெளி மாநில ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. பேன்சி பொருட்கள், துணி வகைகள், ஜூவல்லரிகள் என பல வகையான பொருட்கள் நீங்கள் விரும்பும் டிசைன்களில் குவிந்துள்ளன. மகளிர் ஸ்பெஷல்கள் மலைக்க வைக்கும் விதத்தில் குவிந்துள்ளன.

குட்டீஸ் கார்னர்

குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு புதுமையான விளையாட்டுகள் சவால் விட காத்திருக்கின்றன். ஜம்பிங் பலுான், டிஸ்னிவேல்டு, ஒட்டகச் சவாரி, குட்டீ ரயில், வி.ஆர் கேம்கள், பாப்பிட் ஷோ, வாட்டர் ரோலர் என எக்கச்சக்க விளையாட்டுகள் குட்டீஸ்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன.

கனவு இல்லம்

சொந்த வீடு கனவை நிறைவேற்றும் வகையில் கனவு இல்லம் அரங்கத்தில் வீட்டு மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. கண் கவரும் தரை மற்றும் பாத்ரூம் டைல்ஸ் வகைகள், வீட்டின் உட்புறத்திற்கு மெருகூட்டும் திரை சீலைகள், தரை விரிப்புகள் உள்ளிட்ட இன்டீரியர் டெக்கரேஷன் பொருட்கள், சமையல் அறைக்கு அழகூட்டும் சிம்னிகள், டிஷ் வாஷ் அலங்கார விளக்குகள் என வீட்டிற்கு தேவையான பல்வேறு பொருட்கள் குவிந்துள்ளன. வீட்டு கடனுதவிக்காக கே.வி.பி., வங்கி கனவு இல்லத்தில் வழிகாட்ட உள்ளது.

ஆட்டோமொபைல்ஸ்

கார் மற்றும் பைக் பிரியர்களை கவரும் வகையில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் புது மாடல் கார், பைக்குகளை கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளன. கண்காட்சிக்கு வந்தால் சலுகை விலையில் வாங்கி ஓட்டிச் செல்லலாம்.

‘புட் கோர்ட்’

ஷாப்பிங் செய்து களைத்தவர்களை சுவையால் சுண்டி இழுக்கும் சைவம், அசைவம் உணவுகள் உள்ளன. திண்டுக்கல் வேணு பிரியாணி, பீசா, பர்கர், சான்ட்விச், ஆந்திரா, கேரளா, சைனீஸ் உணவு வகைள், பான்-பான் ஐஸ்கிரீம், மேஜிக் ஐஸ்கிரீம், பிரஷ் ஜூஸ் வகைகள், சுவையான கடல் உணவுகள், மதுரை ஜிகர்தாண்டா, சிக்கன் உணவுகள் என உண்டு மகிழ ஏராளமான உணவு வகைகள் வரிசை கட்டியுள்ளது

ஷாப்பிங் நேரம்:

கண்காட்சி நுழைவு கட்டணம் ரூ. 40. தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை கண்காட்சியில் ஷாப்பிங் செய்து மகிழலாம், இன்றே வாங்க குளு குளு அரங்கில் குடும்பத்துடன் அசத்தலான ஷாப்பிங் செய்யலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.