AK 62 ஹீரோயின் அப்டேட்: நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்திருக்கிறார் அஜித். போனிகபூர் தயாரித்திருக்கும் இப்படமானது பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை படம் ஏற்படுத்தியிருக்கும் சூழலில் படத்தில் இடம்பெற்றிருக்கும் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. வினோத்துடன் இணைந்த முதல் இரண்டு படங்களில் விட்டதை இந்தப் படத்தில் அஜித் பிடித்துவிடுவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித். இது நடிகர் அஜித்தின் 62 படமாகும், இதனால் இதற்கு ஏகே 62 என்று வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. நானும் ரௌடிதான் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்க உள்ளார். படத்தில் யார் யார் நடிக்கப்போகிறார்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜனவரி 2023 முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் படத்தின் ஹீரோயின் குறித்த சில குழப்பங்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன.
இதனிடையே ஏகே 62 படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அனிரூத் இசையமைக்க உள்ள நிலையில், யார் நாயகியாக நடிக்கப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே நயந்தாரா, திரிஷா என இருவரில் ஒருவர் நடிப்பார்கள் என கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவருமே தங்களின் அடுத்தடுத்து வேறு படங்களில் நடிப்பதால், இந்த படத்திற்கு நடிகை காஜல் அகர்வாலிடம் பேச்சு வார்த்தை நடந்தி வருகிறதாம் படக்குழு. முன்னதாக அஜித்துடன் நடிகர் காஜல் அகர்வால் விவேகம் படத்தில் நடித்துள்ளார். மேலும் AK 62 திரைப்படம் வழக்கமான விக்னேஷ் சிவன் படங்களை போல நகைச்சுவை கலந்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.