நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்திருக்கிறார் அஜித். போனிகபூர் தயாரித்திருக்கும் இப்படமானது பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை படம் ஏற்படுத்தியிருக்கும் சூழலில் படத்தில் இடம்பெற்றிருக்கும் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. வினோத்துடன் இணைந்த முதல் இரண்டு படங்களில் விட்டதை இந்தப் படத்தில் அஜித் பிடித்துவிடுவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. நானும் ரௌடிதான் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த விக்னேஷ் சிவன் அடுத்து சூர்யாவை வைத்து இயக்கிய தானா சேர்ந்த கூட்டம், விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் தோல்வியை சந்தித்தார்.
இருந்தாலும் விக்னேஷ் சிவன் மேக்கிங் சிறப்பாக இருக்கும் என்பதால் அஜித்தை வைத்து இயக்கப்போகும் படம் நிச்சயம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் ஏகே ரசிகர்கள். படத்தில் யார் யார் நடிக்கப்போகிறார்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதற்கிடையே கௌதம் வாசுதேவ் சமீபத்தில் அளித்த பேட்டியில் விக்னேஷ் சிவன் படத்தில் தான் இருப்பதாக் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அஜித், விக்னேஷ் சிவன் படத்தில் வில்லனாக யார் நடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தனி ஒருவன் படத்தில் வில்லனாக மிரட்டிய அரவிந்த் சாமி இப்படத்தில் வில்லனாக நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது. அதேபோல் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் சந்தானம் நடிக்கலாம் என தெரிகிறது.
மேலும் படிக்க | அஜித்துடன் இணைகிறாரா இயக்குநர் கௌதம் வாசுதேவ்?… ரசிகர்கள் ஆவல்