டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்றுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி 10ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த சூழலில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 4ந்தேதி முதல் விசாரணை நடைபெற்று […]
