புதுடில்லி:ஜம்மு – காஷ்மீரில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்க்கும் பிரிவின் தலைவரான அஹமத் அஹங்கர், நேற்று மத்திய அரசால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டார்.
மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்த அஹமத் அஹங்கர் என்ற அபு உஸ்மான் அல்காஷ்மீரி, தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டில் பதுங்கி உள்ளார். ஜம்மு – காஷ்மீரில் உள்ள ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பிரிவின் முக்கிய தலைவரான இவர், ௨௦ ஆண்டுகளாக மத்திய அரசால் தேடப்பட்டு வருகிறார். இவருக்கு அல் – குவைதா உள்ளிட்ட உலகின் பிற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது.
அஹமத் அஹங்கர், காஷ்மீரில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, காஷ்மீரை அடிப்படையாக வைத்து நடத்தப்படும் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தி வருகிறார்.
இவர், இந்தியாவை மையமாக வைத்து இயங்கும் ஐ.எஸ்., அமைப்பின் பிரசார இதழை துவக்கியதில் முக்கிய பங்காற்றினார். இவரது பெயர், சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் நான்காவது அட்டவணையில் சேர்க்கப்பட்டதன் வாயிலாக, பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement