ரிஷப் உள்ள மருத்துவமனையில் `தி லெஜண்ட்’ நாயகி ஊர்வசி ரதுலா? மீண்டும் கிளம்பும் சர்ச்சை!

ரிஷப் பண்ட்டுடன் இணைத்து பேசப்பட்டு வந்த நிலையில் நடிகை ஊர்வசி ரதுலா, தற்போது அந்த வதந்திகளுக்கு கூடுதல் வலு சேர்க்கும் விதமாக, ரிஷப் இருக்கும் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவமனையின் புகைப்படம் பதிவிட்டுள்ளார். ஊர்வசி ரதுலா, தமிழில் தி லெஜண்ட் படத்தில் நாயகியாக நடித்தவராவார்.
சில தினங்களுக்கு முன் (டிச 30, 2022) கார் விபத்தில் படுகாயமடைந்திருந்தார் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட். விபத்தின் தாக்கத்தை தொடர்ந்து, மும்பையின் கோகிலபன் திருபாய் அம்பானி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார் ரிஷப். அவரை இன்று நேரில் சந்தித்து நடிகை ஊர்வசி ரதுலா நலம் விசாரித்துள்ளார் என சொல்லப்படுகிறது. 25 வயதாகும் ரிஷப் பண்ட், கடந்த வாரம் டெல்லியிலிருந்து தன் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானார். முதலில் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது மேல் சிகிச்சைகளுக்காக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 image
இந்நிலையில் மும்பையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப்பை நடிகை ஊர்வசி ரதுலா, அன்றைய தினமே நேரில் சந்தித்தாக தகவல்கள் கசிந்தன. இதுபற்றி அவர் நேரடியாக பதிவேதும் போடவில்லை என்ற போதிலும்கூட, அவர் மும்பையில் இருப்பதாக போட்ட ஒரு போஸ்ட் மூலம், பலரும் அவர் ரிஷப்பை சந்திக்கவே சென்றுள்ளார் என கூறிவந்தனர். இந்நிலையில் தற்போது ஊர்வசி ரதுலா மும்பையில் ரிஷப் உள்ள மருத்துவமனையின் வெளிப்புர புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து சந்தேகம் வலுவடைந்துள்ளது.
image
இதைத்தொடர்ந்து ஊர்வசி ரதுலா, ரிஷப் பண்ட் மீது கண்மூடித்தனமான காதலில் இருப்பதாகவும் இணையத்தில் பலரும் பகிர்ந்துவருகின்றனர். ஆனால் இதுபோன்ற தகவல்கள் எதுவும் இணைய உலகுக்கு புதிதில்ல என்பதே உண்மை. 2018-ம் ஆண்டு முதலே இவையாவும் பரவிவருகின்றது. உணவகங்கள், பார்ட்டிகள் தொடங்கி பல இடங்களில் இருவரும் ஒன்றாக இருந்ததாக அடிக்கடி தகவல்கள் கசிவது இணையத்தில் வழக்கம்தான். இருப்பினும் 2019-ல், ரிஷப் பண்ட் அந்த தகவல்களில் எதுவும் உண்மையல்ல என்பதை பகிரங்கமாக போட்டுடைத்தார். தனக்கு இஷா நிகி என்ற காதலி இருப்பதாக இன்ஸ்டாவில் புகைப்படம் பகிர்ந்து இதை சொல்லியிருந்தார் அவர்.
image
இருப்பினும் ஊர்வசி ரதுலாவின் சில பதிவுகளால் வதந்திகள் தொடர்ந்து வந்தன. சில மாதங்களுக்கு முன்புகூட `சோட்டு பையா’ என்று பதிவிட்டு, #RPChotuBhaiyya and #DontTakeAdvantageOfASilentGirl என்று பதிவிட்டிருந்தார் ரடுலா. இதில் RP என்பது ரிஷப் பண்ட்டை குறிப்பதாக கூறி, மீண்டும் சலசலப்புகள் கிளப்பின. இந்நிலையில் தன் பேட்டியொன்றில் `Mr. RP, நான் அவரை நேரில் சந்திக்கவில்லை என எனக்கு மிஸ்டு கால் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்’ என்று குறிப்பிட்டார்.
image
இதற்கு ரிஷப் இன்ஸ்டாவிலேயே ரிப்ளை செய்தார். அதில் ரிஷப், `என்னை தனியாக விடுங்கள்’ என்று கூறியிருந்தார்.
image
இந்நிலையில்தான் தற்போது அவர் விபத்துக்குள்ளான பின் மீண்டும் ஊர்வசி ரடுலா சில பதிவுகளை போட்டு வருகின்றார். முதலில் `பிராத்திக்கிறேன்’ என வெள்ளை நிற ஹார்ட் எமோஜியுடன் அவர் புகைப்படம் பதிவிட்டிருந்த நிலையில், தற்போது மருத்துவமனையின் புகைப்படத்தை பதிவிட்டு மீண்டுமொருமுறை பேசுபொருளாகியிருக்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.