வில்லனுக்கு வில்லனாகும் வில்லன்? – வந்தாச்சு #AK62 அப்டேட்!

துணிவு பட ரிலீசுக்கு முன்பே அஜித்தின் 62வது படத்தின் அப்டேட்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருவது அவரது ரசிகர்களுக்கு டபுள் தமாக்காவாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ட்விட்டரில் #AK62 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

என்னவெனில், விக்னேஷ் சிவன் இயக்கப் போகும் இந்த படத்தில் யார் யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியானதை அடுத்து அந்த ஹேஷ்டேக்கின் கீழ் பதிவுகளை பறக்கச் செய்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

அதன்படி, AK62-ல் வில்லனாக அரவிந்த் சாமியும், மற்றுமொரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிகர் சந்தானமும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கெனவே அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான பாசமலர்கள் படத்தில் அஜித் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து இருவரும் ஒரே படத்தில் அதுவும் ஹீரோ வில்லனாக நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது.

(L to R) Arvind Swami, Ajith and  Santhanam

இதுபோக தமிழ் சினிமாவில் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம் AK62ல் அஜித்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார். ஆனால் காமெடியனாக வரப்போகிறாரா அல்லது என்ன மாதிரியான ரோலில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.

படத்தின் ஷூட்டிங் பணிகள் ஜனவரி பிற்பகுதியில் தொடங்கும் என்றும் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேச்சமயத்தில் தன்னுடைய ட்ரிப் வேலைகளை முடித்துக் கொண்டு அஜித் ak62ல் இணைவார் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

முன்னதாக, தனியார் இணையதள நேர்காணலில் பங்கேற்றிருந்த விக்னேஷ் சிவனிடம் AK62 என்ன மாதிரியான படமாக இருக்கும் என்ற கேள்விக்கு, “நான் ஆக்‌ஷன் படங்கள் இயக்கியதில்லை. ஆகையால் AK62ல் எனக்கு என்ன வேண்டும் என்பதை கொண்டு வருவதற்கான முழு சுதந்திரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது” என தெரிவித்திருந்தார்.

ஆகையால் அஜித்தின் 62வது படம் என்ன மாதிரியான Genre-ல் இருக்கப் போகிறது என்பதே இப்போதுவரை சஸ்பென்ஸாகதான் வைக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மீதான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது என்றே கூறலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.