அத்தியாவசியத் தேவை இருந்தாலொழிய அந்த நாட்டுக்குச் செல்லவேண்டாம்: ஜேர்மனி வலியுறுத்தல்


அத்தியாவசியத் தேவை இருந்தாலொழிய சீனாவுக்கு பயணிக்கவேண்டாம் என ஜேர்மனி தன் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனாவால் திணறிக்கொண்டிருக்கும் சீனா

உலகின் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடான சீனா, கோவிட் பிரச்சினைகளால் திணறிக்கொண்டிருக்கிறது. கோவிட் கட்டுப்பாடுகளை நெகிழ்த்தியதைத் தொடர்ந்து அந்நாட்டில் மீண்டும் தொற்று அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், இன்று ட்விட்டரில் தன் மக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சகம்.

அதில், சீனாவில் கொரோனா தொற்று உச்சத்தில் உள்ளதுடன், அங்கு மருத்துவ அமைப்பும் தொற்றை எதிர்கொள்ளத் திணறிவருகிறது. ஆகவே, சீனாவுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 

அத்தியாவசியத் தேவை இருந்தாலொழிய அந்த நாட்டுக்குச் செல்லவேண்டாம்: ஜேர்மனி வலியுறுத்தல் | Non Essential Travel To Covid Hit China



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.