பெங்களூரு: கர்நாடகாவை சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். கடந்த 2019-ல் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார்.
எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘எனக்கு 90 வயதாகிறது. இனி அரசியலில் தீவிரமாக செயல்பட முடியாது. அதனால் முழு நேர அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். ஆனாலும் அரசியலில் இருந்து முழுமையாக விலகவில்லை. பாஜக தலைவர்கள் விரும்பினால் உரிய அரசியல் ஆலோசனைகளை வழங்குவேன். பாஜகவில் என்னை யாரும் புறக்கணிக்கவில்லை” என்றார். பாஜகவில் ஓரங்கட்டப்பட்டதாலே இந்த முடிவை எடுத்திருப்பதாக எஸ்.எம்.கிருஷ்ணாவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.