மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டை தென்கால் பாசன விவசாயிகள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி காளைகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கமிட்டியைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியை யார் நடத்துவது என்பது தொடர்பாக இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
