சட்டவிரோத குடியேற்ற மோசடியில் இருவர் கைது! கடற்படையினர் விடுத்துள்ள கோரிக்கை


வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றம்
தொடர்பாக போலியான உத்தரவாதங்களை வழங்கி பலரிடம் பணம் பெற்ற இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர், இலங்கையின் காவல்துறையினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில்,  கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் ஜனவரி 04 ஆம் திகதி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

30 மற்றும் 41 வயதுடைய இரு நபர்களே இவ்வாறு நீர்கொழும்பில்
வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

சட்டவிரோத குடியேற்ற மோசடியில் இருவர் கைது! கடற்படையினர் விடுத்துள்ள கோரிக்கை | Two Nabbed Foreign Employment Illegal Migration

மக்களே அவதானம் 

இவர்கள், சிலாபம் மற்றும் கிளிநொச்சியை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இவர்கள் 20 பேரிடம் இருந்து சுமார் 05 மில்லியன் ரூபாய்களை பெற்றுள்ளதாக
குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறான மோசடிகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறும்,
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் கடற்படையினர் வேண்டுகோள்
விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.