சரவணன் மீனாட்சி ஜோடிக்கு ஆண் குழந்தை : எட்டு ஆண்டுகளுக்குப் பின் மகிழ்ச்சி செய்தி

விஜய் டிவியில் கடந்த 2011-ல் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற சீரியல் சரவணன் மீனாட்சி. இதில் சரவணனாக மிர்ச்சி செந்தில்குமாரும், மீனாட்சியாக கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜா சந்திரனும் நடித்தனர். கிட்டத்தட்ட 500 எபிசோடுகள் வரை ஜோடியாக நடித்தவர்கள் அந்த சமயத்தில் காதல் வசப்பட்டு 2014ல் திருமணமும் செய்து கொண்டனர். கடந்த 4ஆம் தேதி கேரளாவில் உள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் ஸ்ரீஜா.

திருமணம் முடிந்து எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை வெளியிட்டுள்ள மிர்ச்சி செந்தில் தங்களுக்கு பிறந்த குழந்தை மூலம் தாங்களும் அப்பா அம்மாவாக புதிதாக பிறந்திருக்கிறோம் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.