ராஜ்கோட்: இலங்கைக்கு எதிரான 3வது டி-20 கிரிக்கெட்டில் 91 ரன்னில் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் வென்றது.
இலங்கை அணிக்கு எதிரான 3வது டி-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் சேர்த்தது.
சூர்யகுமார் அதிரடி சதம்
இந்திய வீரர்கள் சுப்மான் கில் 46 ரன்களும் ராகுல் திரிபாதி 35 ரன்களும் சேர்த்து அணிக்கு உதவினர். சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 112 ரன் சேர்த்தார். இதில் 9 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் அக்ஷர் பட்டேல் 21 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் இந்திய அணி, இலங்கை அணிக்கு 229 ரன் இலக்கு நிர்ணயித்தது.

இதனையடுத்து கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும் பாண்ட்யா, உம்ரான் மாலிக், சாஹல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இதனை தொடர்ந்து இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி கண்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement