வேலூர்:: தமிழ்நாடு குறித்து கவர்னர் ஆர்என்.ரவி பேசிய கருத்து கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், கவர்னரின் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதே வேளையில் கமல்ஹாசனின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்து உள்ளார். வேலூர் சத்துவாரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் உள்ள பா.ஜ.க.வினர் தமிழ் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை வேறு கலாச்சாரத் தில் உள்ளனர். கவர்னர் தமிழ்நாடு என சொல்லக்கூடாது. தமிழகம் என சொல்ல வேண்டும் என கூறுகிறார். […]
