தமிழ்நாட்டு இன்ஜினியரை சுயமரியாதை திருமணம் செய்த பிலிப்பைன்ஸ் பெண் – வாழ்த்திய அமைச்சர்

அரியலூரில் இணையவழியில் இணைந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளரை, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் சுயமரியாதை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் பொறியியல் படித்து விட்டு சிங்கப்பூர் நாட்டில் பணியாற்றி வருகிறார். இதேபோல் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் வெல்ஜோலின். இவர் வேளாண்மை படித்துவிட்டு நெதர்லாந்து நாட்டில் வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே நட்பு உண்டாகி பின்னர் காதலித்து வந்துள்ளனர்.
 
image

தற்போது இருவரும் மனம்‌ ஒத்த நிலையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து பெரியாரின் சுயமரியாதை படி திருமணம் செய்ய பெரியோர்கள் சம்மதித்த நிலையில் ஆண்டிமடம் கவரப்பாளையம் அண்ணா பெரியார் கலை  அரங்கத்தில் திராவிட கழக பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமையில் இணை ஏற்பு விழா நடைபெற்றது. இதில்‌ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட‌ போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மணமக்களை வாழ்த்தினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.