ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தின்போது துணை ராணுவப்படை வீரர் கொல்லப்பட்ட வழக்கில் இரண்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இளம்பெண்ணின் மரணம்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணம் நாடு முழுவதும் போராட்டங்களை தூண்டியது.
ஏராளமான பெண்கள் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆளும் அரசுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது.
அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
துணை ராணுவ வீரர் மரணம்
கடந்த நவம்பர் மாதம் 3ஆம் திகதி நடந்த போராட்டத்தின்போது, துணை ராணுவ வீரர் ருஹோல்லா அஜாமியன் என்பவர் கொல்லப்பட்டார்.
அவரது மரணம் தொடர்பில் முக்கிய குற்றவாளிகளாக முகமது மஹ்தி கராமி, சையத் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மரண தண்டனை நிறைவேற்றம்
அவர்களுக்கு டிசம்பர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த செவ்வாய்கிழமை தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் கராமி, சையத் இருவருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக நீதித்துறை செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.