கோவை மாவட்டத்தில் உள்ள பல்லடம் சாலையோடு பொள்ளாச்சி சாலையை இணைக்கின்ற புதிய சாலைக்கு அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் சாலை என்று பேரிடப்படுவதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து இருக்கின்றார்.
சென்னை கலைவாணர் அரங்கில் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழாவானது நடந்தது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவின் மலரை வெளியிட்ட அவர் பேசிய போது, “பொள்ளாச்சி நா.மகாலிங்கம் மனித பண்பில் சிறந்து விளங்கினார்.
மேலும் செல்வத்தை அரணாக்கி பயன்படுத்தியவர் பொள்ளாச்சி மகாலிங்கம். இவர் வடமாநிலங்களுக்கும் திருக்குறளை கொண்டு சென்று சேர்க்க உதவியவர். பொள்ளாச்சி மகாலிங்கத்தை அருட்செல்வர் என்று அழைப்பது மட்டுமல்லாமல் தமிழ் செல்வர் என்றும் அழைக்கலாம்.
அவரது நினைவாக பல்லடம் கோவை இணைப்பு சாலைக்கு பொள்ளாச்சி மகாலிங்கம் சாலை என்று பெயர் வைக்கப்படும்.” என கூறியுள்ளார்.