
கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடித்துள்ள 'டாடா' பட டீஸர் வெளியானது
பிக்பாஸ் புகழ் கவின் மற்றும் மலையாள நடிகை அபர்ணா தாஸ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'டாடா'. இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹரிஷ், புகழ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ், தயாரிப்பாளர் எஸ். ஆர் பிரபு, நடிகர் ஆர்யா, இயக்குநர் நெல்சன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இம்மாதம் இப்படம் வெளியாகவுள்ளது.