டகார் : ஆப்ரிக்க நாடான செனகலில் நேற்று நடந்த இரண்டு பஸ்கள் மோதிய விபத்தில், 40 பேர் பலியாகினர்; 80 பேர் காயமடைந்தனர்.
செனகலின் காப்ரின் நகர் அருகே உள்ள கினிவி கிராமத்தில் நேற்று அதிகாலையில் இரண்டு பஸ்கள் மோதிக் கொண்டன. இதில் பயணம் செய்த, 40 பேர் பலியாகினர்; 80 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்துள்ள சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென டயர் பஞ்சரானது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரே வந்த மற்றொரு பஸ் மீது மோதியதில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
விபத்து குறித்து அந்நாட்டு அதிபர் மேக்கி சால், பலியானவர்களின் குடும்பத்திற்கு தன் இரங்கலை தெரிவித்ததுடன், மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement