பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கு.. ஏன் நான் இல்லையா..! – குஷ்பு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் கட்சியில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தன்னை போல சில பெண்களும் அண்ணாமலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டினார். கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட அவர் கட்சியில் இருந்து விலகி அண்ணாமலையை குறித்து தினம்தினம் பலவித குற்றசாட்டுகளை வைத்து வைத்து வருகிறார். இந்த நிலையில், காயத்ரி ரகுராமின் குற்றச்சாட்டுக்கு நடிகை குஷ்பு பதிலடி கொடுத்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

கோவையை அடுத்த வெள்ளலூர் நெடுஞ்சாலை அருகே பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா நடைபெற்றது.பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில் நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பூ சுந்தர் கலந்து கொண்டார். முன்னதாக அப்பகுதியை சேர்ந்த மக்களுடன் குஷ்பு பொங்கல் வைத்து வழிபட்டு பொங்கலை ரிமாறிக்கொண்டதுடன், வண்ண உடைகளுடன் வெள்ளிகும்மியாட்டம் ஆடி அசத்தினார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய குஷ்பு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. எல்லா பெண்களும் வெளியே போகவில்லை. நானும் கட்சியில் தானே இருக்கிறேன். திமுகவில் எனக்கு எதிராக தான் நடந்துக் கொண்டனர். ஆனால் அதற்கு பாஜக ஆதரவாக நின்றது. அண்ணாமலை களத்தில் போராடினார் என்றார்.

தொடர்ந்து பேசியவர், கமல்ஹாசன் காங்கிரஸ் நடைபயணத்தில் பங்குபெற்றது அவருடைய கட்சியின் உரிமை. பொங்கலுக்கு துணிவு, வாரிசு படத்திற்கும் போகமாட்டேன். வீட்டில் தான் இருப்பேன்.

அண்ணாமலை முந்தைய தலைவர்கள் போல இல்லை அவர் ஒரு துணிச்சலான தலைவர். தமிழகம், தமிழ்நாடு என்று சொல்வது தவறில்லை. மும்பையில் பிறந்தாலும் நான் தமிழச்சி என்றார்.

குஷ்பு பேசியதற்கு பிறகு காயத்ரி ரகுராம் அதற்கு ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், அண்ணாமலைக்கு நேருக்கு நேர் பேச தைரியம் இல்லாததால் கட்சியில் இருப்பவர்களை பேச வைக்கிறார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். பாஜகவில் உள்ள வேறு யாருடனும் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.