ராகுல் டிஷர்ட் குறித்து ஆய்வு செய்பவர்களே..? சத்தீஸ்கர் முதல்வர் காட்டம்.!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்தும் நோக்கிலும், காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கிலும், செல்வாக்கை இழந்த காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஆதரவை கூட்டவும், அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தி, பாரத் ஜோடோ என்ற பெயரில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை நடத்தி வருகிறார்.

இந்த ஒற்றுமைப் பயணம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது. இதை திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களை கடந்து, தற்போது பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை ராகுல் காந்தி தொடர்ந்து வருகிறார்.

இந்த யாத்திரை முழுவதும் ராகுல் காந்தி டிஷர்ட் அணிந்து கொண்டு பயணம் செய்து வருகிறார். இந்த குளிர்காலத்தில் ராகுல் காந்தியால் டிஷர்ட் போட்டுக் கொண்டு எப்படி சமாளிக்க முடிகிறது என ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதற்கு பதிலளித்து ராகுல் காந்தி பேசும்போது, ‘‘டிஷர்ட் போட்டு யாத்திரை மேற்கொள்வதால் குளிர் என்னை வாட்டவில்லையா என தொடர்ந்து கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் ஏழைகள், விவசாயிகள், உணவு கிடைக்காத குழந்தைகள், வேலை கிடைக்காத இளைஞர்கள் குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்ப மறுக்கின்றன.

நான் டிஷர்ட் போட்டிருப்பது குறித்து மட்டும் தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றனர். நான் 2800 கி.மீ நடந்துள்ளேன். எனக்கு இது பெரிய விஷயமாக தெரியவில்லை. விவசாயிகள் கடுமையாக உழைக்கின்றனர். விவசாய வேலையாட்களுக்கு கடுமையாக விவசாயம் செய்கின்றனர். இந்தியாவின் உழைக்கும் மக்கள் ரத்தம் சிந்தி உழைத்து வருகின்றனர்’’ என அவர் தெரிவித்தார்.

அதேபோல் பாஜகவும் ராகுல் டிஷர்ட் குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருகிறது. இந்தநிலையில் சத்திஸ்கர் முதல்வர் பூபேந்திர பாகல் இன்று ஊடகங்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ராகுல் காந்தி டிஷர்ட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கும் போது, ‘‘நாட்டில் இது முதல்முறையாக நடக்கவில்லை. நாக சாதுக்கள், திகம்பர் ஜைன முனிகள் என பலர் ஆடையின்றி தங்கியுள்ளனர். டிஷர்ட் குறித்து ஆய்வு செய்யாமல், ராகுல் காந்தி எழுப்பும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.

தினமும் ஒரு டோஸ் வெறுப்பு விஷம் கக்கப்படுகிறது; முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம்.!

அவர் (மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா) மக்களவைத் தேர்தலுக்காக மாநிலத்திற்கு வருகிறார். மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக அல்ல. பாரதிய ஜனதா கட்சி தனக்கு பிடித்த இரண்டு தலைப்புகளை முன்வைக்கிறது: ஒன்று மதமாற்றம் மற்றும் சிறுபான்மை வெறுப்பு. கடந்த நான்கு ஆண்டுகளில். , எங்கள் கட்சி விவசாயிகள் மற்றும் பெண்கள் உட்பட அனைத்து குழுக்களின் வருவாயையும் அதிகரித்தது’’ என அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.