லண்டனில் கட்டிடத்துக்குள் மோதிய கார்! சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் மரணம்.. நடந்தது இதுதான்


லண்டனில் கட்டிடத்துக்குள் கார் மோதியதில் அதன் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கட்டிடத்துக்குள் மோதிய கார்

கிழக்கு லண்டனில் தான் இச்சம்பவம் சனிக்கிழமையன்று நடந்துள்ளது.
அதன்படி South Woodfordல் உள்ள கட்டிடத்துக்குள் கார் ஒன்று மோதியது.
இதில் 40 வயதான அந்த காரின் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து அவர் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது என பொலிசார் கூறியுள்ளனர்.

லண்டனில் கட்டிடத்துக்குள் மோதிய கார்! சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் மரணம்.. நடந்தது இதுதான் | London Car Crashed Into A Building Dies

GOOGLE

சாட்சிகள்

விசாரணை அதிகாரிகள் வேறு எந்த வாகனங்களும் இந்த விபத்தில் சிக்கவில்லை என்று நம்புகிறார்கள்.

மேலும் சாட்சிகள் மற்றும் சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகளை கொண்ட எவரும் முன்வந்து தகவல் கொடுக்குமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.