காந்திநகர்: இந்தியாவின் மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனமான அமுல் டெய்ரியின் மேலாண் இயக்குனர் ஆர்.எஸ். சோதி ராஜினாமா செய்தார்.
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களை ஒன்றிணைத்து ஆனந்த் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கம் துவக்கப்பட்டது. இதனை ஆங்கிலத்தில் ‘அமுல்’என்று அழைத்தனர். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், தின்பண்டங்கள் தயாரிப்பில் முன்னணியிலுள்ள இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக இருந்த ஆர்.எஸ். சோதி இன்று பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக ஜெயன் மேத்தா மேலாண் இயக்குனராக பொறுப்பேற்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement