சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அனைவருக்கும் வணக்கம் என தமிழில் வணக்கம் செலுத்திவிட்டு, ஆளுநர் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி உள்பட திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. முன்னதாக சட்டப்பேரவைக்கு காலை 9.50மணி அளவில் வருகை தந்த ஆளுநரை சபாநாயகர் அப்பாவு வரவேற்று அழைத்துச் சென்றார். அதன்பின், காலை 10 மணிக்கு கூட்ட அரங்குக்குள் வருகை […]
