திருப்புத்தூர் சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே கீழ்பட்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவி பிரமிளா (31). இவர் நேற்று மாலை வீட்டின் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மேலப்பட்டமங்கலத்தை சேர்ந்த கிட்டு என்ற கிருஷ்ணவர்மன் (40), மது போதையில் அவரை அவதூறாக பேசினார். இதை அவரது கணவர் கார்த்திகேயன் தட்டி கேட்டார். உடனே ஊராட்சி தலைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது புகாரின்படி திருக்கோஷ்டியூர் போலீசார் கிட்டுவை கைது செய்தனர்.