சித்தராமையா குறித்து சர்ச்சை புத்தகம்; பாஜகவின் வேலை என காட்டம்.!

கர்நாடகா மாநிலத்தில் வருகிற ஏப்ரல்-மே மாதத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில் கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா குறித்து புத்தகம் ஒன்று வெளியிடப்பட உள்ளது.

புத்தக வெளியீட்டு விழா பற்றிய சுவரொட்டிகளில், அதன் அட்டையில் திப்பு சுல்தானைப் போன்ற உடையை அணிந்து, வாள் ஏந்திய சித்தராமையாவின் படத்தைக் கொண்ட புத்தகங்களின் நகல்க உள்ளன. இந்நிகழ்ச்சிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் சி என் அஸ்வத் நாராயண் தலைமை தாங்கி புத்தகத்தை வெளியிடுவார் என சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாடநூல் ஆய்வுக் குழுவின் தலைவரான எழுத்தாளர் ரோஹித் சக்ரதீர்த்தா, பத்திரிகையாளர் சந்தோஷ் தம்மையா, விக்ரம சம்வதாவின் ஆசிரியர் விருஷங்கா பட், எழுத்தாளரும் சமூக சேவகியுமான ராகேஷ் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சியில், பாஜக எம்எல்சி சலவாடி நாராயணசுவாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என கூறப்பட்டுள்ளது.

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் போது கூறப்படும் தவறான ஆட்சி மற்றும் அவரது “சமாதான அரசியல்” குறித்த எழுத்துக்கள் புத்தகத்தில் உள்ளன. முன்னாள் முதலமைச்சரின் பதவிக் காலத்துடன் தொடர்புடைய சில சர்ச்சைக்குரிய மற்றும் வகுப்புவாத உணர்வுப்பூர்வமான விவகாரங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்தும் புத்தகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தன்னை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் “சித்து நிஜகனாசுகள்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட புத்தகம், முற்றிலும் அவதூறானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா கூறியுள்ளார். இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

இது குறித்து சித்தராமையா கூறும்போது, “எனக்குத் தெரியாது, மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு எல்லாம் மஞ்சள். திப்பு சுல்தான் போன்ற உடையை அணிந்து, கையில் வாள் பிடித்தவர்கள், எடியூரப்பா மற்றும் ஷோபா கரந்த்லாஜே ஆகியோர் தான். திப்பு பற்றிய ஷேக் அலியின் புத்தகத்திற்கு முன்னுரை எழுதியது இருமை இல்லையா? இந்த புத்தகத்தின் பின்னணியில் பாஜகவின் பங்கு இருப்பதாக சந்தேகம் உள்ளது.

தேர்தலுக்கு முன் என்னை அவமானப்படுத்துவதற்காக, அவர்கள் ஒரு புத்தகத்தை வெளியிடுகிறார்கள். இது முற்றிலும் அவதூறானது. சட்டப்பூர்வமாக என்ன செய்வது என்று நான் பார்ப்பேன்’’ என அவர் கூறியுள்ளார். இந்நிகழ்ச்சி குறித்து ட்வீட் செய்த உயர்கல்வித்துறை அமைச்சர் அஷ்வத் நாராயண், “சித்து நிஜகனாசுகள்” புத்தகத்தின் மூலம் பல முக்கியமான விஷயங்களை வெளிப்படுத்துவதுடன், பல கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியை பாராட்டுகிறேன். இதன் பொது வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

40% கமிஷன் அடிப்பது மட்டுமே நோக்கம்; முதல்வரை சாடிய சித்தராமையா.!

இதற்கிடையில், நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கு நிலைமையை மனதில் வைத்து ஏற்பாட்டாளர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் சட்டப் பிரிவு காவல்துறையை அணுகியுள்ளது. நல்லிணக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சதித்திட்டத்துடன் சித்தராமையாவின் படம் திரிக்கப்பட்டதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.