விழுப்புரம்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் குறைந்தபட்ச அரசியல் நாகரீகம் கூட இல்லை என கே.பாலகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; கடந்த பல மாதங்களாக அரசியல் சாசனத்துக்கு எதிராக பல கருத்துக்களை ஆளுநர் பேசியுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் குறைந்தபட்ச அரசியல் நாகரீகம் கூட இல்லை. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற பெரிய தலைவர்களின் பெயர்களை வாசிக்காமல் ஆளுநர் விட்டுவிட்டார். அரசு தயாரித்த உரையை மாற்றியும் திருத்தியும் படித்தது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவம் உள்ளிட்ட அனைத்து கோட்பாடுகளையும் மீறியுள்ளார் ஆளுநர்.
