செஞ்சி அருகே நிலக்கரி ஏற்று வந்த லாரி திடீரென தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
எண்ணூர் துறைமுகத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள செம்மேடு பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது செஞ்சி திண்டிவனம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுனர் குளிக்க சென்றுள்ளார்.
அப்பொழுது திடீரென லாரியிலிருந்து தீ பிடித்து புகை வந்துள்ளது. இதைப் பார்த்த லாரி ஓட்டுநர் உடனடியாக இதுகுறித்து செஞ்சி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நிலக்கரியினுள் தண்ணீர் பாய்ச்சி தீயை அணைத்தனர். மேலும் துரிதமாக செய்யப்பட்டு தீயை அணைத்ததால் ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.