மண்பானையில் பொங்கல் வைத்திட வலியுறுத்தும் கல்லூரி மாணவர்கள்!

உலக மக்கள் அனைவரும் மண்பானையில் பொங்கல் வைத்திட வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் நேதாஜி கல்லூரி மாணவிகள் மண்பானை, கரும்பு, இஞ்சி கொத்து, மஞ்சள் கொத்து வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பொது மக்களுக்கு கரும்புகள் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் தைத்திருநாள் பொங்கல் விழா முன்னிட்டு உலக மக்கள் அனைவரும் மண்பானையில் பொங்கல் வைத்தி வழிபட வலியுறுத்தி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிறுவனம் மற்றும் மகரிஷி பள்ளி மாணவ மாணவிகள் இணைந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அவர்களுக்கு இன்று மண்பானை, கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

குறிப்பாக நமது முன்னோர்கள் மண்பானையில் பயன்படுத்தி உணவு மற்றும் தண்ணீர் குடித்ததால் அவர்களுக்கு நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வமாக வாழ்ந்து வந்தார்கள், இப்பொழுது மாறி வரும் உலகத்திற்கு ஏற்றவாறு மக்கள் பித்தளை மற்றும் சில்வர் பானையில் பயன்படுத்துவதனால் நம்மை நோய் துரத்திக் கொண்டு வருகிறது. அதை வலியுறுத்தியும் மேலும் மண் பானை செய்யும் மக்களின் வாழ்வு தரம் உயர வேண்டும் என்பதற்காகவும் வலியுறுத்தி மண்பானை கொடுத்து முதல்கட்டமாக மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் தமிழக அரசு சார்பில் இந்த ஆண்டு பொதுமக்களுக்கு முழு கரும்பு வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குனர் விஜய் உள்ளிட்ட ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.