ராகுல் காந்திக்கு பிரதமராகும் திறன் உள்ளது; திரிணாமுல் எம்பி உறுதி.!

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ராகுல் காந்தி துவங்கினார். இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா, தற்போது ஹரியானா மாநிலத்தில் நுழைந்துள்ளது. ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பொதுமக்கள், எதிர்கட்சி தலைவர்கள், சினிமா நடிகர்கள், முன்னாள் அரசு அலுவலர்கள், முன்னாள் ராணுவ வீர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

ராகுல் காந்தியின் நடைபயணம் உலக அளவில் பேசு பொருளாகியுள்ளது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்தநிலையில் ராகுல் காந்திக்கு பிரதமராகும் திறன் உள்ளதாக திரிணாமுல் காங்கிர கட்சி எம்பி சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியபோது, ‘‘ ராகுல் காந்தி மேற்கொண்டு வருவது, ஒரு வரலாற்று மற்றும் புரட்சிகரமான யாத்திரை. ராகுல் இளைஞர்களின் அடையாளமாக உருவெடுத்துள்ளார். அவரது இமேஜ் முன்பு போல் இல்லாமல் தற்போது முற்றிலும் மாறிவிட்டது. சிலர் ராகுல் காந்தியின் இமேஜை அழிக்க முயற்சி செய்கிறார்கள், ஆனால் அவர் நாட்டின் தலைவராக மிகவும் தீவிரமானவராக உருவெடுத்துள்ளார்.

ராகுல் காந்திக்கு பிரதமராகும் திறன் உள்ளது. அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிரதமராக தேசத்திற்கு சேவை செய்து, நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர். எண்களின் அடிப்படையில், மம்தா பானர்ஜி 2024-ல் கேம் சேஞ்சராக வெளிப்படுவார். மம்தா பானர்ஜி ஒரு இரும்புப் பெண்மணி, அவரை இப்போது யாரும் இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது.

பாரத் ஜோடோ யாத்திரை, எல்கே அத்வானியின் ரத யாத்திரை மற்றும் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் யாத்திரையுடன் ஒப்பிடதக்க முக்கியத்துவம் வாய்ந்தது. 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று பாஜக எப்போதும் கேட்கிறது. பிறகு ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்களை நாட்டிற்கு வழங்கியது யார் என்பதை அவர்கள் கூற வேண்டும்.

மக்கள் தொகை கட்டுப்பாடு; பீகார் முதல்வர் சர்ச்சை கருத்து.!

பொதுத்தேர்தலில் பாரத் ஜோடோ யாத்திரை நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். பிரதமர் யார் என்பதை இந்திய மக்கள் முடிவு செய்வார்கள். பொதுத் தேர்தல் நெருங்கும் போது பல்வேறு எதிர் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடுவார்கள். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். இது ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் புரட்சிகர யாத்திரையாகும்” என்று சின்ஹா கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.