வருமான வரி! ரத்து செய்யப்படும் நடவடிக்கை : விரைவில் சுற்றுநிரூபம்


வருமானம் ஈட்டும் போது செலுத்தப்பட வேண்டிய வரி, அரச, அரச அனுசரனை பெற்ற நிறுவனங்களின் ஊடாக செலுத்தும் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றுநிரூபம் இந்த வாரத்துக்குள் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய  தெரிவித்துள்ளார். 

முறைக்கேடான விடயங்களுக்கு இடமளிக்க முடியாது

வருமானம் ஈட்டும் போது செலுத்தப்பட வேண்டிய வரி என்பது குறிப்பிட்ட தொகைக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் போது செலுத்தப்பட வேண்டிய வரியாகும்.

வருமான வரி! ரத்து செய்யப்படும் நடவடிக்கை : விரைவில் சுற்றுநிரூபம் | Tax Payable On Earning Income

ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக வருமானம் பெறுபவர்கள் இந்த வரியை செலுத்த வேண்டும்.

இந்தநிலையில் சில அரச மற்றம் அரச அனுசரனை பெற்ற நிறுவனங்களினால் இந்த வரி செலுத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக  ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நாட்டின் தற்போதைய நிலையில் இவ்வாறான முறைக்கேடான விடயங்களுக்கு இடமளிக்க முடியாது.

தனியார், அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற சகல நிறுவனங்களிலும் பணியாற்றும் நபர்கள் குறிப்பிட்ட தொகையை விடவும் அதிக வருமானம் பெறும் போது வரி செலுத்துதல் வேண்டும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மேலும் குறிப்பிட்டார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.