வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதியில் காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 12,250 லிட்டர் கள்ளசாராயம் கொட்டி அழிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் கள்ளசாராய விற்பனையை ஒழிக்க காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மலை கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்ததால் தனிப்படை அமைக்கப்பட்டு அங்கு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது.
அதன் பலனாக கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 12,250 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. காவல்துறை, உயர் அதிகாரிகள் முன்னிலையில் இது கொட்டி அழிக்கப்பட்டது. கள்ளச்சாரயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட உரல்களும் முழுவதுமாக அழிக்கப்பட்டன. கள்ளச்சாராய விற்பனைக்கு எதிரான சோதனைகள் தொடரும் என மாவட்ட மது விளக்கு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.