ஆளுநர் தவிர்த்தது என்ன?

சென்னை: ஆளுநர் உரையில் இடம்பெற்ற சில வாசகங்களை, பேரவையில் தனது உரையின்போது ஆளுநர் ரவி நேற்று குறிப்பிடாமல் தவிர்த்துவிட்டார். அவர் தவிர்த்த வாசகங்கள்:

சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மத நல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகளே இந்த அரசின் அடித்தளம். பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகள், கோட்பாடுகளை பின்பற்றி, பார் போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகிறது.

தமிழர் நலன், தமிழ்நாட்டின் வளத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இந்த அரசுஅயராது உழைக்கிறது.எத்தனை இடர்ப்பாடுகள் இந்த லட்சியப் பாதையில் எதிர்நின்றாலும், அவற்றை கடந்து தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் வெற்றிகரமாக இந்த அரசு தொடர்ந்து வழிநடத்துகிறது. இந்த வாசகங்களை ஆளுநர் தனது உரையில் தவிர்த்துவிட்டார். பின்னர், அவர் தவிர்த்த வாசகங்களையும் சேர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.