ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் – திருமாவளவன் அழைப்பு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை கூறிவருகிறார். அந்தவகையில் தமிழ்நாடு என்று அழைக்கக்கூடாது தமிழகம் என்றுதான் அழைக்க வேண்டுமென சில நாள்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் பேசினார். அவரது பேச்சு சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பியது. பலரும் அவருக்கு கண்டண்டம் தெரிவித்தனர். அதேபோல் சட்டப்பேரவையில் நேற்று தனது உரையில் திராவிட மாடல் ஆட்சி உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்த்துவிட்டார். மேலும்  பாதியிலேயே வெளிநடப்பும் செய்தார்.

இந்தச் சூழலில், இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு என்ற வார்த்தையை புறக்கணிக்கிறார் என்றால், அவர் இங்கு ஆளுநராக இருக்க தகுதியற்றவர். ஆளுநரை கண்டித்து உடனடியாக எதிர்வினை ஆற்றிய முதல்வரின் நடவடிக்கை போற்றுதலுக்குரியது.

திட்டமிட்டு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் ஆளுநரை கண்டித்து வருகிற 13ஆம் தேதி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இண்ட்த முற்றுகைப் போராட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் “குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்” என்றார்.

முன்னதாக, தமிழ்நாடு என்று கூறக்கூடாது என சொன்ன ஆளுநரை கண்டித்து சமூக வலைதளங்கள் முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. பலரும் #GetoutRavi என்ற வாசகத்தை பயன்படுத்தினர். சூழல் இப்படி இருக்க சட்டப்பேரவையில் ஆளுநரை தாக்கி யாரும் பேசக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏக்களுக்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.