இதென்ன விண்ணுலகா மண்ணுலகா? கொடைக்கானல் மலைப்பகுதிகளில் துவங்கியது உறைபனிக் காலம்!

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடும் உறைபனி நிலவி வருகிறது. இதனால் 6 டிகிரி செல்சியஸாக வெப்பம் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டின் சமவெளி பகுதிகளில், கடும் மூடுபனி காலமும்; 2,000 மீட்டர் உயரத்தை தாண்டிய மலைப்பகுதிகளில், கடும் உறைப்பனி காலமும் துவங்கியுள்ளது. இதில் கொடைக்கானல் கோக்கர்ஸ் பள்ளத்தாக்கு பகுதிகளில் காணப்படும் கடும் மூடுபனியின் அடர்த்தியான கடல் போல் நிலை கொண்டுள்ள காட்சிகள் காண்போரை மயங்க செய்கிறது. அப்பனிக்கடலில் உதிக்கும் இளங்காலை கதிரவனின் அழகும், காண்போர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
image
2,000 மீட்டர் உயரத்தை தாண்டி அமைந்துள்ள கொடைக்கானல் மலைப்பகுதிகளில், நீர் நிலைகளுக்கு அருகில் கடுமையான உறைபனி ஏற்பட்டு ஊசி போல குத்தும் இக்குளிர் அதிகாலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் நீடித்து நிலவுகிறது. மலைப்பகுதிகளில் தற்பொழுது வீரியமாக துவங்கியுள்ள உறைபனிக் காலம் மேலும் சில வாரங்கள் நீடித்து பிப்ரவரி மாதம் முதல் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
image
ஆண்டு தோறும் ஏற்படும் இந்த அறிய உறைபனிக் காலகட்டத்தில், பனிக்கால சுற்றுலாவை ஏற்படுத்தி அதன்மூலம் பனிக்கடலில் உதிக்கும் சூரிய உதயத்தையும், உறைபனி விழும் பகுதிகளையும் பிரத்யேகமாக சுற்றுலா பயணிள் காண ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றுலாத் துறைக்கு உள்ளூர் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.