இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி கௌஹாத்தியில் இன்று (10) நடைபெறவுள்ளது.
இலங்கை நேரப்படி போட்டி இன்று (10) பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான ரி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த இலங்கை அணி வெற்றிக்காக ஒருநாள் தொடரில் களமிறங்கவுள்ளது.